ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் பூ வியாபாரி மகேந்திரன். இவர் தன்னுடைய சொந்த அத்தை மகளான பாரதியை 8 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர் நிச்சயித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் அவ்வபோது மகேந்திரன் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சண்டையிட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதே போல் தொடர்ந்து செய்து வந்ததால் ஒரு கட்டத்தில் மது போதை அடிமையாகியாகியுள்ளார் மகேந்திரன்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் மகேந்திரனை கர்நாடகா மாநிலம் சர்ஜாபுரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறவைத்துள்ளனர். இருப்பினும் மீண்டும் மதுபோதைக்கு அடிமையாகி மணைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதே போல் தொடர்ந்து செய்துவந்ததால் மனமுடைந்த அவரது மனைவி பாரதி கடந்த 15 நாள்களுக்கு முன்பு திப்பாளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மகேந்திரன் கடும் கோபத்தில் இருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிய பாரதி, இன்று காலை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பாகலூர் போலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பாரதியின் கணவரை கைது செய்ய முயன்ற போது அவர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தப்பியோடிய மகேந்திரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:"இந்திய ஜனநாயகத்தை உடைக்க விட்டுவிடாதீர்கள்" - மதுரை தேர்தல் களத்தில் நடிகை ரோகிணி அளித்த சிறப்பு பேட்டி