தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவி மீது சந்தேகம்.. கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர் கைது! - Husband stabbing his wife - HUSBAND STABBING HIS WIFE

Husband Stabbing His Wife: சென்னை விருகம்பாக்கத்தில் மனைவி மீது சந்தேகமடைந்த கணவர் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 8:25 PM IST

சென்னை: சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன் (43). ஆட்டோ ஓட்டுநரான இவர், ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், தனது மனைவியின் மீது சந்தேகம் அடைந்த திருமுருகன், அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து கணவரிடம் பேச்சுவார்த்தை நடத்த அவரது தாயின் வீட்டிற்கு அப்பெண் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, இதில் ஆத்திரமடைந்த திருமுருகன் தான் வைத்திருந்த சிறிய கத்தியை தனது மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது மகள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவியை கொலை செய்த திருமுருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக்கில் கலந்து கொள்ளாததற்கு இது மட்டுமே காரணம்.. ஜி.கே.வாசன் கூறுவது என்ன? - GK Vasan about NITI Aayog

ABOUT THE AUTHOR

...view details