விழுப்புரம்:கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜி.கே.தமிழரசன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவருக்கு கட்சியின் மற்ற நிர்வாகிகள் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாவட்ட நிர்வாகி தமிழரசன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட தவெகவினர், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்து தங்களை பாமகவில் இணைத்துக் கொண்டனர்.
பாமகவில் இணைந்த இளைஞர் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu) இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழரசன்,"பட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ராமதாஸின் செயல்பாடுகள் எங்களுக்கு பிடித்துள்ளது. அதனால் தவெகவில் இருந்து விலகி பாமகவில் இணைத்துக் கொண்டோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:விக்கிரவாண்டி மாநாடு விஜய்க்கு வெற்றியை தருமா? எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோரின் முதல் மாநாடு பின்னணி!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்.27) விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாளை நடைபெறவுள்ள மாநாட்டில் விஜய், தனது கட்சியின் நோக்கங்கள், கொள்கைகள், திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் இடையே உரையாற்ற இருக்கிறார்.
கட்சி தொடங்கப்பட்ட பின் அவரது முதல் உரை என்பதால் தவெக தொண்டர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திடீரென பாமகவில் இணைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.