சென்னை:தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் 3 செ.மீ, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது. அதிக பட்ச வெப்பநிலை ஈரோட்டில் 43.4 டிகிரி செல்சியஸ் (இயல்பை விட 5.3 டிகிரி செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 5 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 42 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையாக, கரூர் பரமத்தியில் 42.5 சிகிரி செல்சியஸ், வேலூரில் 42.5 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 42.5 சிக்ரிசெல்சியஸ், திருப்பத்தூரில் 42.0 டிகிரி செல்சியஸ், மதுரை 41.2 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.7 டிகிரி செல்சியஸ், சேலம் 40.5 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 40.2 டிகிரி செல்சியஸ், பாளையம்கோட்டையில் 40.2 டிகிரி செல்சியஸ், மதுரை ஏர்போர்ட்டில் 40.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ், பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36 டிகிரி முதல் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் (3.1 டிகிரி செல்சியஸ் அதிகம்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 38.1 டிகிரி செல்சியஸ் (2.0 டிகிரி செல்சியஸ் அதிகம்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (மே 5) மற்றும் நாளை மறுநாள் (மே 6) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 7ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மே 8ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.