தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தவெக மாநாடு: வெளுக்கும் வெயில்.. ஒவ்வொரு முகாம்களிலும் 50 பேருக்கு சிகிச்சை..! ஸ்தம்பிக்கும் வி.சாலை.. - TVK MAANADU HEAT STROKE

தவெக மாநாடு திடலில் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாநாடு திடலில் உள்ள முகாம்
மாநாடு திடலில் உள்ள முகாம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 2:05 PM IST

Updated : Oct 27, 2024, 3:05 PM IST

விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 3 மணி அளவில் மாநாடு துவங்குவதால் இப்போதே அங்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு பந்தலில் முகாமிட்டுள்ளனர்.

மேலும், அங்கு கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருவதால், நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு பல பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மருத்துவ உதவிக்காக மாநாடு நடக்கும் இடத்தில் 11 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் 50க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:"தவெக மாநாட்டுக்கு லட்சகணக்கான தொண்டர்கள் வருகின்றனர்"-விஜய் மாநாடு குறித்து உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?

ஏற்கனவே அங்கு 300 மருத்துவர்கள் மற்றும் 25 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு ஏற்பவாறு அங்கேயே மருத்துவர்கள் முதலுதவி செய்து வருகின்றனர். தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகள் கொண்டு செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மாநாடு திடல் அருகே 24 ஆம்புலன்ஸ்கள் முதல் முகாமிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் அங்கு முகாமிட்டுள்ளதால் தேவையான தண்ணீர் வழங்க ஆங்காங்கே டேங்க் வைக்கப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

மேலும், வெயில் காரணமாக உடல்நல கோளாறு ஏற்படுபவர்களை கண்காணிக்க மருத்துவர்கள் அனைவரும் வாக்கி டாக்கியுடன் அப்பகுதியில் சுற்றி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 27, 2024, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details