கரூர்:கரூர் பாஜக மாவட்ட அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று காலை நடைபெற்றது. இந்த முகாம் பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
விசிக ஒரு வன்முறை அமைப்பு:இந்த முகாமை தொடந்து செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா கூறுகையில், “தமிழகத்தைப் பொறுத்தமட்டில், விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூரில் பாஜக பொதுக்குழுவை எதிர்த்து, பாஜக நிர்வாகிகளை தாக்க விசிகவினர் முற்பட்டனர். நேற்று கூட கரூரில் ஒரு செல்போன் கடையில், இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பதாகக் கூறி விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. விசிக மது ஒழிப்பு மாநாட்டில் மது உற்பத்தி செய்யும் ஆலை உரிமையாளர்களை வைத்துக்கொண்டு மது ஒழிப்பு மாநாட்டை நடத்தினர்.
தமிழ்தாய் வாழ்த்து விவகாரம்:சமீபத்தில் தமிழக ஆளுநர் கலந்து கொண்ட பொதிகை தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது ஒரு வார்த்தை விடுபட்டு விட்டது. இதனைக் கண்டிக்க தமிழக முதல்வருக்கு உரிமை உண்டு. ஆனால், தமிழக ஆளுநர் மீது இனவாத விரோதப்போக்கு காட்டுவதாக கூறும் குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிர்க்கிறோம். தற்போது தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டுள்ளது. இதை ஏன் முதலமைச்சர் கண்டிக்கவில்லை? தற்போது துணை முதல்வரை டிஸ்மிஸ் செய்வாரா? உதயநிதியைப் போல ஒரு தரம் கெட்ட அரசியல்வாதி தமிழகத்தில் யாரும் இல்லை.
இதையும் படிங்க:உலக புகழ் பெற்ற பிரான்ஸ் தேசிய நூலகத்தை பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!