சேலம் : வரும் டிச 21ம் தேதியன்று நடைபெற உள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு குறித்து இன்று ( டிச 14) சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, "முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பாமக சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆண்டுதோறும் மேட்டூர் அணை நிரம்பி, அதன் உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. மேட்டூர் அணையின் உபரி நீர் வீணாகாமல் சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பெறும் வகையில் பனமரத்துப்பட்டி ஏரி உள்ளிட்ட ஏரிகளை நிரப்ப வேண்டும்.