தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பழமையான காண்டாமிருக கொம்பினை விற்க முயன்ற கப்பற்படை அலுவலர் உட்பட ஐந்து பேரை வனத்துறை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் (80). பழவாத்தான்கட்டளை பகுதியில் வசித்து வரும் இவர், கப்பற்படை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் 1982இல் பணியில் இருந்த போது, காண்டாமிருக கொம்பு ஒன்றை முறையாக பதிவு செய்து வாங்கியுள்ளார். இதனை தனது வீட்டில் வைத்திருந்த நிலையில், தற்போது விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
இது குறித்து ரகசிய தகவல் வனத்துறையினருக்கு கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், கும்பகோணம் வனச்சரக அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான வனத்துறையினர், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த கலியபெருமாள், திருவாரூரைச் சேர்ந்த ஹாஜாமைதீன் (76), கும்பகோணத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (45), திருநாகேஸ்வரம் தென்னரசு (47), கும்பகோணம் விஜயகுமார் (57) ஆகியோரிடம் ரூ.20 லட்சம் விலை பேசிக் கொண்டிருந்த நிலையில், வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்து 23 சென்டிமீட்டர் உயரம் 596 கிராம் எடையுள்ள பழமையான காண்டாமிருக கொம்பினை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “முறையாக அனுமதியுடன் மகாராஷ்டிராவில் இருந்து காண்டாமிருக கொம்பினை வாங்கிருந்தாலும், தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும்போது இங்கு அதனை பதிவு செய்ய வேண்டும். ஆனால், கலியபெருமாள் அத்தகைய பதிவு எதுவும் செய்யவில்லை.