தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2.8 லட்சம் பேருக்கு இம்மாதம் புதிய ரேஷன் கார்டு - ராதாகிருஷ்ணன் தகவல்! - J Radhakrishnan - J RADHAKRISHNAN

Food and Consumer Protection Inspection: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் கால்நடை வளர்ப்பு கடன்களாக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து வழங்கப்படவுள்ளதாக கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 4:54 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த பிள்ளையார்பட்டியில் நெல் சேமிப்புக் கிடங்கில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆகியோர் நெல்லின் தரம் மற்றும் சேமிப்புக் கிடங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மழைக்காலங்களில் நெல் சேமிப்புக் கிடங்குகளில் நெல் நனைந்து வீணாகாமல் தடுத்திட மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை 33.14 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், 2.8 லட்சம் குடும்பத்தினருக்கு புதிய ரேஷன் அட்டைகள் இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் கால்நடைகள் வளர்ப்புக் கடன்களாக 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, வருகின்ற மாதங்களில் வழங்கப்பட உள்ளதாக கூறினார். தேர்தல் நேரத்தில் துவரம் பருப்பு, பாமாயில் ஒப்பந்தம் போட தாமதமானதால் தற்போது போர்க்கால அடிப்படையில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:உபரி நீரை சேமிக்க அரசின் நடவடிக்கைகள் என்ன? அமைச்சர் துரைமுருகன் பதில்!

ABOUT THE AUTHOR

...view details