திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கொம்பையா. இவர் கட்டட தொழில் செய்து வருகிறார். நெல்லை - கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் உள்ள ஒரு நகரில் வசித்து வருபவர் மாரியப்பன். இவர் பாளையங்கோட்டையில் இளநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மகள் முத்துபேச்சிக்கும், கொம்பையா என்ற நபருக்கும் திருமணம் நடந்துள்ளது. தற்போது, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முத்துபேச்சிக்கும், அவருடைய கணவருக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால், முத்துபேச்சி தனது தந்தை மாரியப்பன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே, முத்துபேச்சிக்கும், உறவினர் ஒருவக்கும் இடையே திருமணத்துக்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை தந்தை மாரியப்பன் கண்டித்துள்ளார்.
ஆனால், அதனை முத்துபேச்சி கேட்காததாக கூறப்படும் நிலையில், நேற்று இரவு மாரியப்பன் தனது மகள் முத்துபேச்சியை கொலை செய்துவிட்டு, அருகே இருந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார், சம்பவ இடத்தில் நின்றிருந்த மாரியப்பனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாரியப்பனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், தனது மகள் கணவரைப் பிரிந்து வாழும் நிலையில், திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும், அதனைக் கண்டித்த தன் பேச்சை கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதனால், நேற்று (ஏப்.30) இரவு வெளியே சென்றிருந்த முத்துபேச்சியை அழைத்து வரச் சென்ற தந்தை மாரியப்பன், அவரை மேலப்பாட்டத்ததில் உள்ள பாட்டி வீட்டில் கொண்டு போய் விடுவதாகக் கூறி, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் சென்ற போது, மாரியப்பன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துபேச்சியை வெட்ட முயற்சி செய்துள்ளார். ஆனால், அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்துபேச்சி, அருகே இருந்த காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியுள்ளார்.
இருப்பினும், அவரை விரட்டிச் சென்ற மாரியப்பன் தலையைத் துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்" என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதையடுத்து, குற்றப்பத்திரிகை 210ன் படி, தனது மகளையேக் கொலை செய்த வழக்கில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இறந்த முத்துபேச்சியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் கல்லூரிப் பேருந்து - லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து! - College Bus Accident