தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரை வரவேற்று கேரளாவில் பேனர்! - KAKKA THOPPU BALAJI KERALA POSTER - KAKKA THOPPU BALAJI KERALA POSTER

சென்னையில் காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்த தமிழக போலீசாரை பாராட்டி கேரள மாநில இளைஞர்கள் போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் குறித்த மலையாளத்தில் போஸ்டர், மொழியாக்கம் செய்யப்பட்ட போஸ்டர்
காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் குறித்த மலையாளத்தில் போஸ்டர், மொழியாக்கம் செய்யப்பட்ட போஸ்டர் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 9:43 PM IST

தேனி:சென்னை வியாசர்பாடி அருகே கடந்த செப்.18ஆம் தேதி அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி (45) என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர்.

மேலும், காக்கா தோப்பு பாலாஜி மீது ஐந்து கொலை வழக்கு உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் நிலையில் போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவர் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது போலீசார் தற்காப்புக்காக காக்கா தோப்பு பாலாஜியை சுட்டதில் அவர் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

இந்த நிலையில் காக்கா தோப்பு பாலாஜி கடந்த ஜூலை மாதம் கோழிக்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பேராம்பிரா அருகே உள்ள வலியப்பரம்பு எனும் கிராமத்தில் தலைமறைவாகி தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்ட தகவல் அறிந்த அக்கிராம இளைஞர்கள் தமிழக காவல்துறைக்கு வாழ்த்து, தெரிவித்து மலையாளத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details