சென்னை:தமிழ்நாட்டில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது இதன்படி, வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தி வருவோருக்கு முன்பு ஒரு யூனிட்டுக்கு 4.60 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த மின்கட்டணம் இனி 4.80 ரூபாயாக பெறப்படும்.
இதேபோன்று, அதிகபட்சமாக 1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு 11.25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 11.80 ரூபாய் வசூலிக்கப்படும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கனவே 6.15 ரூபாய் பெறபட்டு வந்தது. தற்போது இக்கட்டணம் 6.45 ருபாயாக உயர்த்தப்பட்டு்ள்ளது.
501 முதல் 600 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டுக்கு ஏற்கெனவே 8.15 ரூபாய் பெறபட்டது. தற்போது 8.55 ரூபாயாக உயர்த்தபட்டுள்ளது