சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவரை என்கவுண்டர் செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களை மாறி மாறி காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆற்காடு சுரேஷின் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த போலீசார், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை தேடி வந்தனர். இந்நிலையில், அவர் ஆந்திராவில் தலைமறைவாக இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், அங்கு சென்று நேற்று பொற்கொடியை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ஆற்காடு மனைவி பொற்கொடிக்கும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.