சென்னை:சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்தனர். மேலும், 3 பேரிடமும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த படுகொலைக்கு அரசியல் கட்சியினர் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்த வழக்கில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்த 11 பேரையும் ஜூலை 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.