தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுழல் காற்று எச்சரிக்கை:தூத்துக்குடி மீனவர்கள் 9வது நாளாக கடலுக்கு செல்லவில்லை! - thoothukudi weather report - THOOTHUKUDI WEATHER REPORT

சூழல் காற்று எச்சரிக்கை காரணமாக 9 ஆவது நாளாக தூத்துக்குடி பெரியதாழை முதல் வேம்பார் வரை நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 12:00 PM IST

தூத்துக்குடி: பலத்த காற்று காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடந்த 17 முதல் இன்று 26ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் செய்தி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மேற்குமத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இதனால், 22.05.2024 அன்று தமிழக கடற்பகுதி, ஆந்திர கடற்பகுதி, மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சுழல் காற்றானது மணிக்கு 35-45கி.மீ வரை வீசக்கூடும் எனவும், அக்காற்றானது படிப்படியாக உயர்ந்து 60 முதல் 70 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்பதால் 17.05.2024 முதல் 26.05.2024 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும், மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிடவும் மேலும், தங்களது மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திட வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு 3600 நாட்டுப் படகுகள் உள்ளன. 20,000 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க நேரடி தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். மேலும் இத்தொழிலை நம்பி 10.000 பேர் சார்பு தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வானிலை எச்சரிக்கையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரீமால் புயல்: 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details