சென்னை: கோயம்பேடு சந்தைக்கு நாள் தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. கடந்த ஒருமாதமாக காய்கறி வரத்து குறைந்து வந்ததால் சற்று கூடுதலாக விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை இன்று (அக்.15) திடீரென உயர்ந்து விற்பனையாகிறது.
கோம்பேடு காய்கறி விலை குறித்து கோயம்பேடு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை சங்க தலைவர் எஸ்.எஸ். முத்துக்குமார் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசினார். அதில், அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் மழை காரணமாக கடந்த ஒரு மாதமாக காய்கறி வரத்து குறைந்ததால் காய்கறி விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சராசரி நாளொன்றிற்கு 10 ஆயிரம் டன்னிற்கு மேல் வரும் காய்கறி கடந்த ஒரு மாதமாக 7 ஆயிரம் டன்னாக குறைந்தது. இதன் காரணமாக விலை சற்று உயர்ந்தது. இந்நிலையில், 3 நாட்களுக்கு அதிக மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டதால் பொது மக்கள் காய்கறிகளை வாங்க மார்க்கெட்டில் குவிந்ததால் காய்கறி விலை பல மடங்கு உயர்ந்தது. குறிப்பாக தக்காளி, வெங்காயம், கேரட், பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய், இஞ்சி, பூண்டு மற்றும் பீட்ரூட் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:வடமாவட்டங்களில் கனமழை நிச்சயம்..வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் ரூ. 60க்கும், 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி ரூ.120க்கும், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் 230 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் 60 ரூபாய்க்கும், உருளை 36 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 80 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 70 ரூபாய்க்கும், பீட்ரூட் 70 ரூபாய்க்கும், சவ் சவ் 40 ரூபாய்க்கும், முள்ளங்கி 40 ரூபாய்க்கும், முட்டை கோஸ் 30 ரூபாய்க்கும், உஜாலா கத்திரிக்காய் 50க்கும் விற்பனையாகிறது.
அதேபோல, காராமணி 80 ரூபாய்க்கும், பாகற்காய் 50 ரூபாய்க்கும், புடலங்காய் 50 ரூபாய்க்கும், சுரக்காய் 30 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு 70 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 70 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு 50 ரூபாய்க்கும், காலிபிளவர் 35 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 90 ரூபாய்க்கும், பட்டாணி 250 ரூபாய்க்கும், இஞ்சி 180 ரூபாய்க்கும், பூண்டு 350 ரூபாய்க்கும், அவரைக்காய் 100 ரூபாய்க்கும், மஞ்சள் பூசணி 15 ரூபாய்க்கும், வெள்ளை பூசணி ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 45 ரூபாய்க்கும், எலுமிச்சை 120 ரூபாய்க்கும், நூக்கள் 60 ரூபாய்க்கும்,
கோவைக்காய் 50 ரூபாய்க்கும், கொத்தவரங்காய் 50 ரூபாய்க்கும், வாழைக்காய் (1) 9 ரூபாய்க்கும், கொத்தமல்லி 10 ரூபாய்க்கும், புதினா 5 ரூபாய்க்கும், கருவேப்பிலை 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் காய்கறியின் விலை 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்