தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகைக்கடை உரிமையாளர் மீது திமுக பெண் நிர்வாகி தாக்குதல்? வெளியான பரபரப்புன் சிசிடிவி காட்சிகள்! - DMK activist attacked shop owner - DMK ACTIVIST ATTACKED SHOP OWNER

DMK woman activist hit shop owner: தருமபுரி அருகே கந்து வட்டி கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, திமுக பெண் நிர்வாகி நகைக்கடை உரிமையாளரை தலையில் தாக்கியுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபு மற்றும் திமுக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்ட புகைப்படம்
பிரபு மற்றும் திமுக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்ட புகைப்படம் (Credits: ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 4:52 PM IST

பிரபு பேட்டி மற்றும் திமுக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ (Credits: ETV Bharat Tamil Nadu)

தருமபுரி:கந்து வட்டியால் ஏற்பட்ட தகராறில், காரிமங்கலம் கடைவீதி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளரை, இன்று (மே 19) திமுக பெண் நிர்வாகி, அவரது கடைக்கு நேரில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தலையில் அடித்து தாக்கியுள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் கடந்த 25 ஆண்டுகளாக தருமபுரி அடுத்த காரிமங்கலம் கடைவீதி பகுதியில் நகைக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் அரூரைச் சேர்ந்த மேற்கு மாவட்ட திமுக தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெயா என்பவரிடம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்துள்ளார்.

அவ்வப்போது 10 லட்சம் முதல் 50 லட்சம் வரை வட்டிக்கு கடனாக வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். அப்போது கையொப்பமிட்ட வங்கி காசோலை மற்றும் பத்திரங்களையும் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் அனைத்து கடனையும் திருப்பி கொடுத்துவிட்ட பிறகு, தான் கொடுத்த வங்கி காசோலை மற்றும் பத்திரங்களை பிரபு திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு ஜெயா தான் வேறு இடத்தில் வைத்துள்ளதாகவும், 20 நாட்களுக்குள் நகைக்கடைக்கு வந்து கொடுத்து விடுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், ஜெயா மற்றும் அவரது இரு மகன்கள் அடியாட்களுடன் நேற்று கடைக்கு வந்து, பிரபு 5 கோடி தர வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரபு கொடுத்த பத்திரங்கள் மற்றும் காசோலை தன்னிடம் உள்ளதாகவும், பணம் கொடுக்கவில்லையெனில் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், தான் ஆளும் கட்சியில் பொறுப்பில் உள்ளதால் எங்கு சென்றாலும் பார்த்துக் கொள்கிறேன் என மிரட்டியதோடு, தகாத வார்த்தைகளால் பேசியும், தான் கொண்டு வந்த செல்போனால் பிரபுவின் தலை மீது பலமாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பிரபுவை, நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபுவை தாக்குவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பட்டாசுக் கடைக்கு ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்? சிவகாசியில் நடந்தது என்ன? - Firecracker Shops Inspection

ABOUT THE AUTHOR

...view details