சென்னை:2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு ,தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பது பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பணிகளில் இறங்கியுள்ளது.
அந்த வகையில் தி.மு.க சார்பாக அக்கட்சியின் தேர்தல் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் கனிமொழி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அதில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய வாக்குறுதிகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவர் அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.