தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகாவிஷ்ணு விவகாரம்: சைதாப்பேட்டை அரசுப் பள்ளிக்கு மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ்! - mahavishnu controversy

சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் நடைபெற்ற மகாவிஷ்ணு நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விளக்கம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சைதாப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மகாவிஷ்ணு கோப்புப்படம், மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ்
மகாவிஷ்ணு கோப்புப்படம், மாற்றுத்திறனாளிகள் ஆணையம் நோட்டீஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 6:09 PM IST

சென்னை:சென்னை சைதாப்பேட்டை மாதிரிப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு ஆற்றிய உரை மூடநம்பிக்கைகளை பரப்பு விதத்தில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந் நிலையில், 'தாய்கரங்கள் அறக்கட்டளை' சார்பில், மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில், சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர், சைதாப்பேட்டை அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய இருவரும் இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக, வரும் 25ம் தேதிக்குள் மகாவிஷ்ணு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :மகாவிஷ்ணு விவகாரம்; பள்ளிக்கல்வித் துறை இயக்குநரிடம் தலைமைச் செயலாளர் விசாரணை! - mahavishnu issue

மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச்சட்டம் 2016ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறக்கட்டளை ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. இதனை ஏற்று மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கான பதிலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details