கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துமனைகளியில் 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று காலை வரை கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-ஆக இருந்த நிலையில் சற்று முன் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
அதேபோல், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில், 7 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது சட்டப்பேரவை கூட்டத்தொடர்
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.