விழுப்புரம்: தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சதீஷ். இவர் பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். விழுப்புரம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் கல்லூரி மாணவர் சதீஷிடம் நேரம் கேட்டுள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த கல்லூரி மாணவர் சதீஷ், பள்ளி மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. அப்போது கல்லூரி மாணவர் சதீஷ் இரும்பு கம்பியால் பள்ளி மாணவரின் தலையில் தாக்கியுள்ளார்.
அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தவுடன் சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்தனர். இந்நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவர் தன்னுடைய அண்ணனை அழைத்து வந்து கல்லூரி மாணவர் சதீஷை கடுமையான தாக்கியுள்ளார்.