சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாகவும், ஏனைய தமிழக மாவட்டங்களில் தீவிரமாகவும் உள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது.
அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், தமிழ்நாட்டின் இதர பகுதிகள் பொதுவாக இயல்பை ஒட்டியும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட குறைவாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 31 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.4 டிகிரி செல்சியஸ் (-0.2° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.4 டிகிரி செல்சியஸ் (-0.5° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
ஜூன் 3: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 4: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 5:தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூன் 6 மற்றும் ஜூன் 7: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 8:தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 9: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: