தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீதான மோசடி வழக்கு: வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால் டென்சனான நீதிபதி! - Producer Sathish Kumar case

Film Producer Sathish Kumar Check Fraud Case: காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு விதிக்கப்பட்ட 6 மாதம் சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான கோப்புப்படம்
நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 2:06 PM IST

சென்னை: சென்னை தி.நகரைச் சேர்ந்த ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் (JSK Film Corporation) நிறுவனரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜெ.சதீஷ்குமார் தனது நிறுவனத்தின் சார்பில் வா டீல், மெல்லிசை, புரியாத புதிர், தரமணி, சிவப்பு எனக்கு பிடிக்கும், அண்டாவைக் காணோம், குற்றம் கடிதல், தங்க மீன்கள் உள்ளிட்ட படங்களின் தயாரிப்புக்காக சினிமா பைனான்சியரான ககன் போத்ராவிடம் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ரூ.2.6 கோடி கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த கடன் தொகைக்காக சதீஷ்குமார் ரூ.35 லட்சம் மற்றும் 45 லட்சம் மற்றும் 27 லட்சத்துக்கான வங்கி காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால், சதீஷ்குமார் கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பியதால், அவர் மீது ககன் போத்ரா, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கை தொடர்ந்திருந்தார்.

கடந்த மாதம் இந்த மோசடி வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் 4-வது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.என்.சந்திரபிரபா கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், திரைப்படத் தயாரிப்பாளரான ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், கடனாகப் பெற்ற தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், இந்த தண்டனையை எதிர்த்து ஜெ.சதீஷ்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தண்டனையை ரத்து செய்யவும், நிறுத்திவைக்கவும் வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெ.சதீஷ்குமார் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து தண்டனை நிறுத்து வைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும், தண்டனையை ரத்து செய்யக்கோரிய பிரதான மேல் முறையீடு வழக்கை 21 ஆவது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றியும், விசாரணையை ஆகஸ்ட் 12 தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஓயோ லாட்ஜில் மைனர் பெண் மர்ம மரணம்.. உடன் தங்கிய கல்லூரி மாணவர் அளித்த பகீர் தகவல்.. கும்பகோணத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details