தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பத்தூரில் மழை வெள்ளம் சூழ்ந்த மருத்துவமனை முதல் படகுகள் மூலம் மீட்புப் பணி வரை! - CHENNAI RAINS

சென்னை அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 8:09 PM IST

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு கன மழை முதல் மிக கன மழையும், சில இடங்களில் அதிக கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன் படி நேற்று முன்தினம் இரவு முதலே ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது.

அம்பத்தூரை சூழ்ந்த மழை வெள்ளம்:குறிப்பாக சென்னை கொரட்டூர் முதல் அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம் வரை சாலையன் இருபுறமும் சுமார் 2 அடிக்கு மேல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுயது. மேலும் கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.

இதேபோன்று அம்பத்தூர் பட்டரைவாக்கம் சாலை கருக்கு, கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், டீச்சர்ஸ் காலனி,நகர், பட்டரைவாக்கம் பால் பண்ணை சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை காரணமாக வெள்ள நீர் புகுந்துள்ளது.

படகுகள் மூலம் மீட்பு:இதே போல் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாது சூழ்நிலையில் பொதுமக்கள் வீட்டிலே முடங்கினர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர், போலீசார் மற்றும் மீட்புப் படையினர் ஆகியோர் இணைந்து படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:“பச்ச குழந்தைங்க குளிர்ல உக்காந்து படிக்குதுங்க சார்”- வளையாம்பட்டி அங்கன்வாடி மையம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு!

மூடப்பட்ட மருத்துவமனை:கொரட்டூர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இஎஸ்ஐஆ(ESI) மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பெய்த கனமழை காரணமாக மருத்துவமனை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மருந்து வாங்க வருவோர் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் பணிக்கு வந்த மருத்துவ பணியாளர்கள் செய்வதறியாமல் திகைத்து வீடு திரும்பினர். இதனால் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

முகாம்களில் தங்க வைப்பு:மீட்கப்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை ஆய்வு செய்தார்.

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள்:அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கால்களில் செருப்பு கூட அணியாமல் பணியாற்றிவருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details