கோயம்புத்தூர்:கோவையில் யூ டியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் கடந்த 4ம் தேதி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து சென்னை, திருச்சி, ஊட்டி ஆகிய மாவட்டங்களிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனியார் யூ டியூப் சேனலில் சவுக்கு சங்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக நேதாஜி பேரவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: “என் வீட்ல எதையாச்சும் வச்சுட்டு போய்டிங்கனா...” - ரெய்டுக்கு வந்த போலீசாரிடம் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி வாக்குவாதம்! - Youtuber Felix Gerald