கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் பந்தைய சாலையில் உள்ள கே.ஜி.மருத்துவமனை சார்பில் புத்தக வெளியீட்டு விழா மற்றும் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்குவிருது வழங்கும் விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தனியார் விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்:இந்நிலையில் நேற்றைய தினம் இந்த விழா நிகழ்ந்த தனியார் நட்சத்திர விடுதிக்கு குறுஞ்செய்தி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதையடுத்து ஹோட்டலில் கோவை பந்தைய சாலை போலீசார் நடத்திய சோதனையில் அந்த குறுஞ்செய்தி வெறும் புரளி என்பது தெரிவந்துள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு.. நடுவானில் நிகழ்ந்ததால் பதற்றம்!
கிருத்திகா உதயநிதியின் பெயரில் மிரட்டல்:இதே போன்று கோவையில் மேலும் இரண்டு தனியார் நட்சத்திர விடுதிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குறுஞ்செய்தி கிருத்திகா உதயநிதியின் பெயரில் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று அந்த தனியார் நட்சத்திர விடுதியில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்ட நிலையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் நடிகை சினேகா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்