தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் மரணம். வெளிநாட்டவரை கைது செய்த போலீசார் - நடந்தது என்ன? - Chennai Murder case

Chennai Auto Driver Murder case: சென்னை ராயபுரத்தில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஆங்கிலோ இந்தியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வம், கைது செய்யப்பட்ட ரெக்கார்டோ ஆகியோரது புகைப்படம்
உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வம், கைது செய்யப்பட்ட ரெக்கார்டோ ஆகியோரது புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 12:40 PM IST

சென்னை:சென்னை ராயபுரம் சி.பி.காலனி பகுதியைச் சேர்ந்தவர், செல்வம்(60). ஆட்டோ ஓட்டுனரான இவர் இன்று மாலை சென்னை பெரவள்ளூர் எஸ்.ஆர்.பி.கோவில் தெருவில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார்.

அப்போது பெரவள்ளூரைச் சேர்ந்த ஆங்கிலோ இந்தியன் ரெக்கார்டோ தனது மகனை அழைத்துச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் அதே பள்ளிக்கு வந்தார். அங்கு ஆட்டோ ஓட்டுனர் செல்வத்திற்கும், ஆங்கிலோ இந்தியன் ரெக்கார்டோவுக்கும் இடையே வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆட்டோ ஓட்டுனர் செல்வம் ரெக்கார்டோவை தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்த ரெக்கார்டோ, செல்வத்தை அடித்து கீழே தள்ளியதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் செல்வத்தை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆட்டோ ஓட்டுனர் செல்வத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவல்களின் பேரில் பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வம் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பின்னர், போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனர் செல்வத்தை அடித்து கொலை செய்த ஆங்கிலோ இந்தியன் ரெக்கார்டோவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:குடியிருப்பு பகுதிக்குள் நார் தொழிற்சாலை? கள்ளிப்பட்டி கிராமத்தினரின் கோரிக்கை என்ன? - pollachi COIR COMPANY issue

ABOUT THE AUTHOR

...view details