சென்னை: சுதந்திர தினவிழா தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணிகள் புறப்பட்டு செல்வதால், சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.
நாட்டின் 78வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருப்பதால் நாடு முழுவதும் முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. சுதந்திர தினம், அதனைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைகள் வருகிறது. இதை அடுத்து தொடர் விடுமுறையாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னை நகரில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கின்றது. இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதன் காரணமாக வழக்கம் போல் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
சென்னை - தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.4,301 ஆனால் இன்றும், நாளையும் ரூ.10,796
சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ.4,063 ஆனால் இன்றும், நாளையும் ரூ.11,716