தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவுக்கும், அந்தம்மாவுக்கு சம்பந்தம் இல்லை: சசிகலாவுக்கு ஈபிஎஸ் பதிலடி! - SASIKALA ENTRY - SASIKALA ENTRY

Eps vs Sasikala: அதிமுகவிற்கும் அந்த அம்மாவிற்கும் ( சசிகலா ) எந்த சம்பந்தமும் இல்லை என்று வி.கே.சசிகலாவிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா
எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா (Image Credits: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 7:13 AM IST

சென்னை:அதிமுகவிற்கும் அந்த அம்மாவிற்கும் ( சசிகலா ) எந்த சம்பந்தமும் இல்லை என்று வி.கே.சசிகலாவிற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை அதிமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவரிடம், இன்று போயஸ் கார்டனில் தனது ஆதரவாளர்களை சந்தித்த பிறகு வி.கே சசிகலா செய்தியாளர் சந்திப்பில், 'அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் சாதி அரசியல் செய்துவருவதாகவும் அதிமுகவில் சாதி அரசியல் செய்வதை தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்' என்று கூறியிருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, "அதிமுகவிற்கும் அந்த அம்மாவிற்கும் ( சசிகலா ) எந்த சம்பந்தமும் இல்லை" என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக நேற்று, சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "இந்தியாவில் மூன்றாவது பெரிய இயக்கமாக இருந்த அதிமுக, ஒரு சில சுயநலவாதிகளால் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் அவர்களிடம் கற்று கொண்டேன்.அதிமுக முடிந்துவிட்டது என நினைப்பவர்களுக்கு என்னுடைய என்டிரி ஆரம்பம் ஆகிவிட்டது" என்று சசிகலா ஆவேசமாக கூறியிருந்தார்.

அத்துடன், "தற்போது அதிமுகவில் சாதி அரசியல் செய்கிறார்கள். அவர்கள் தனியாக சாதி இயக்கத்தை உருவாக்கி சென்றால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் அதிமுகவிலிருந்து செய்வதை ஏற்க முடியாது" என்றும் ஈபிஎஸ்லை மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதையும் படிங்க:"நான் வந்துட்டேனு சொல்லு.. திரும்ப வந்துட்டேனு சொல்லு" - சசிகலா ரீ என்ட்ரி! - sasikala entry in admk

ABOUT THE AUTHOR

...view details