தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதியே போயிட்டாரு; அப்புறம் எதுக்கு பேனா சிலை? ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு சிவி சண்முகம் பதிலடி! - CV SHANMUGAM - CV SHANMUGAM

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு நாவடக்கம் தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி மற்றும் சிவி சண்முகம்
ஆர்.எஸ்.பாரதி மற்றும் சிவி சண்முகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 7:09 PM IST

விழுப்புரம்:அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே நேற்று (செப்டம்பர் 23) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அம்மா உணவகத்தைப் பற்றிக் கூறுகிறார். 'அம்மாவே போய்ட்டாங்க அம்மா உணவகம் எதற்கு? என்று கூறுகிறார். அதற்கு காட்டமாகப் பதில் அளித்த சிவி சண்முகம் ஒருமையில், "கருணாநிதியே போய்விட்டார் அவர் எழுதின பேனாவுக்கு சிலை வைக்கப் போகிறீர்களா? என்றார். மேலும் ஆர்.எஸ்.பாரதி இது போன்ற பேச்சை நிறுத்திக் கொள்ள வேண்டும" என்றார். தொடர்ந்து விழுப்புரம் புதிய பேருந்துநிலையம் அருகே நடைபெற்ற கலந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு. (Credits - ETV Bharat)

அப்போது பேசியதாவது,"திமுக ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறினார். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட சரியாக கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் விற்பனை தடையின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை, தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

முன்னாள் அமைச்சர் மீது வழக்குகள் போடுவது, அடியாட்கள் வைத்து மிரட்டுவது போன்றவைகளுக்கு எல்லாம் பயப்படுகின்ற கட்சி அல்ல அதிமுக. அனைத்தையும் பார்த்துவிட்டு தான் இங்கே வந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. கருணாநிதி, ஸ்டாலின் அதன் பிறகு உதயநிதி இவர்கள் மட்டுமே கட்சியை நடத்த வேண்டும். முதல்வராக வேண்டும் என்றால் வேறு திமுகவினரே இல்லையா? என கேள்வி எழுப்பினார். மேலும் அதிமுக என்பது அப்படி அல்ல அடிப்படைத் தொண்டனும் முதல்வராகலாம் என்கிற கட்சி தான் என்றார்.

இதையும் படிங்க:"அம்மாவே போய் சேந்துருச்சு..அப்புறம் என்ன அம்மா உணவகம்?" - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details