சென்னை:விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று (மே 25) நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு 'அம்பேத்கர் சுடர் விருது' வழங்கப்பட்டது. விழா மேடையில் பிரகாஷ்ராஜ் பேசியதாவது,
"அரசியலில் எனக்கு நீண்ட பயணம் கிடையாது. உடம்புக்கு காயமானால், ஏதும் செய்யாமல் இருந்தால் கூட உடல்வலி தானாகப் போய்விடும். ஆனால் நாட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும்போது, அதுதொடர்பாக நாம் பேசாமல் இருந்தால் அந்த பாதிப்பு அதிகமாகிவிடும்.
மக்கள் நம்பிக்கை, அன்பு காரணமாகவே இந்த நிலையில் இருக்கிறேன். ஒரு கலைஞன் குரல் கோழையாகிவிட்டால் ஒரு சமுதாயம் கோழையாகிவிடும். அரசியல் தொடர்பான புரிதல் என்னுடைய திறமையால் வந்தது அல்ல.
மாறாக அம்பேத்கர், பாரதியார், காந்தி, லங்கேஷ், மார்க்ஸ் போன்ற பலருடைய சிந்தனையைப் படித்ததன் காரணமாக வந்தது. அந்த புரிதல் இருக்கும்போது என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.
கடந்த ஒன்பது வருடங்களாகத்தான் இந்த மன்னனைப் (மோடி) பற்றிப் பேசி வருகிறேன். 10 ஆண்டுகளாக மன்னராக இருந்தவர் இப்போது தெய்வமாகிவிட்டார். மறைந்த கவுரி லங்கேஷின் தந்தை தான் என்னுடைய ஆசான். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு எனக்கு வேலை இருக்குமா, இல்லையா? என்பது தெரியாது.