தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சாதியைக் குறிப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” - தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்பு! - South Chennai nomination

South Chennai nomination: தமிழ்ச்சி தங்கப்பாண்டியன் வேட்பு மனுவில் சாதியைக் குறிப்பிடவில்லை என சுயேட்சை வேட்பாளர் முறையீடு செய்த நிலையில், சாதியை குறிப்பிட வேண்டும் என கட்டாயம் இல்லை எனவும், அது வேட்பாளர் விருப்பத்திற்கு உட்பட்டது என கூறி வேட்பு மனு ஏற்கப்பட்டது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 6:19 PM IST

south chennai dmk admk nomination
south chennai dmk admk nomination

சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு 63 பேர் வேட்பு மனுபு தாக்ககல் செய்தனர். இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பெருநகர சென்னை மாநராட்சியின் அடையாறு மண்டல அலுகவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.பி.அமித் தலைமையில் நடைபெற்றது.

இந்த பரிசீலனைக் கூட்டத்தில் அந்தந்த கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஜெ.ஜெயவர்த்தன் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழ்ச்சி தங்கப்பாண்டியன் வேட்புமனுவில் சாதியைக் குறிப்பிடவில்லை என்பதால். வேட்புமனுவை ஏற்கல் கூடாது என சுயேட்சை வேட்பாளர் ஜெயராமன் முறையீடு செய்தார்.

சாதியைக் குறிப்பிட வேண்டும் என கட்டாயம் இல்லை எனவும், அது வேட்பாளர் விருப்பத்திற்கு உட்பட்டது என தேர்தல் நடத்தும் அலுவலர் அமித் கூறி, தமிழச்சி தங்கப்பாண்டியன் வேட்பு மனுவையும் ஏற்றுக் கொண்டார். பின்னர், தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனுவில், ஆளுநர் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதற்கான ஆவணத்தை இணைக்கவில்லை என்றால் நிராகரிக்க வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் மோகன் முறையீடு செய்தார்.

அசையும் சொத்துகளில் வருமானம் ஈட்டியது குறித்த விவரங்களில் ஒரு ஆவணம் இணைக்கப்படவில்லை என சுயேட்சை வேட்பாளர் பாலாஜி முறையீடு செய்தார். ஆனால், வேட்புமனுவை நிராகரிக்க போதிய காரணங்கள் இல்லாததால், தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனுவையும் தேர்தல் நடத்தும் அலுவலர் அமித் ஏற்றுக் கொண்டார். அடுத்ததாக, தென் சென்னை நடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தமிழ்ச்செல்வி வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும், வேட்பு மனுக்களை வரும் 30ஆம் தேதி வரையில் திரும்பப் பெறலாம் எனவும், அன்று மதியம் 3 மணிக்கு போட்டியில் உள்ள வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று, ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியாகின்றன.

இதையும் படிங்க: கடற்கரை பூங்காவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டித் தங்க செயினை பறித்த காவலர் கைது! - Policeman Snatched Gold Chain

ABOUT THE AUTHOR

...view details