தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 13 மீனவர்கள் சென்னை திரும்பினர்! - TN FISHERMEN RELEASED - TN FISHERMEN RELEASED

TN FISHERMEN RELEASED: இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேர் கொழும்பிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை வந்தடைந்த மீனவர்கள்
சென்னை வந்தடைந்த மீனவர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 3:03 PM IST

சென்னை:புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த ஜூலை 1ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, அவர்களைச் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து படகு, மீன்பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தில் சிறையில் அடைத்தனர்.

அதேபோல், ஜூலை 12ஆம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களிடம் இருந்த 3 படகுகளையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இது தமிழக மீனவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் 13 பேரையும் விடுவிக்க ஊர்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீனவர்கள் 13 பேரையும் விடுவித்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, அனைத்து மீனவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, எமர்ஜென்சி சான்றிதழ் மூலம் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் மூலம் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனங்களில் மீனவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:மும்பை போல் மாறிய சென்னை.. மின்சார ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details