சென்னை: தமிழ்நாட்டில் குளிர் காலம், மழைக்காலம் முடிவடைந்து தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. மார்ச் 1 முதல் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வந்த நிலையில், இன்றைய தினம் மாநிலத்தில் உள்ள 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது.
திருச்சியில் 105 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெப்பநிலை.. 11 இடங்களில் சதம் அடித்த வெயில்! - Today high temperature - TODAY HIGH TEMPERATURE
TN Weather Update: தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், இன்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
TN Weather Update
Published : Apr 17, 2024, 9:07 PM IST
அந்த வகையில், இன்றைய தினம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாகக் கரூர் பரமத்தியில் 106.7°F வெப்பமானது பதிவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில்,
- திருச்சி - 105.08°F
- வேலூர் - 104.9°F
- ஈரோடு - 106.52°F
- தருமபுரி - 104°F
- கோயம்புத்தூர் - 102.38°F
- சென்னை மீனம்பாக்கம் -100.94°F
- மதுரை நகரம் - 102.2°F
- மதுரை விமான நிலையம் - 103.46°F
- நாமக்கல் - 103.1°F
- சேலம் - 103.28°F
இதையும் படிங்க:சென்னை தி.நகரில் பிரசாரத்தை நிறைவு செய்த தமிழிசை செளந்தரராஜன்! - Lok Sabha Election 2024