தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் பங்காளாதேஷைச் சேர்ந்த பெண் உட்பட 7 பேர் கைது.. சட்டவிரோதமாக தங்கியிருந்ததால் நடவடிக்கை!

ஈரோட்டில் விசா முடிந்தும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்களாதேஷைச் சேர்ந்த பெண் உட்பட 7 பேரை கைது செய்த பெருந்துறை போலீசார் சிறையில் அடைத்தனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

கைது செய்யப்பட்ட நபர்கள்
கைது செய்யப்பட்ட நபர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு:ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநிலத்தில் இருந்து வந்து தங்கி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி, தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் சென்று வந்த 25க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிலர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: துப்பாக்கி, அரிவாளுடன் கரூரில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் கைது!

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த முகமது ஒலி உல்லா, முகமது சாஜிப் உசைன், பாரூக் உசைன், முகமது மிஸ்டர் அலி, மோன்ஜில் உசைன், முகமது அன்வர் உசைன் மற்றும் பாத்திமா என்ற பெண் ஆகிய 7 பேரும், விசா காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, பெண் உட்பட 7 பேரையும் கைது செய்த பெருந்துறை போலீசார், ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details