தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பரின் தங்கைய தவறாக பேசியவரின் தலையை சிதைத்து கொலை.. சென்னையில் பயங்கரம்! - chennai murder case - CHENNAI MURDER CASE

Chennai murder: சென்னையில் தங்கையை தவறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த இளைஞர், தனது நண்பனை சரமாரியாக வெட்டி தலையை சிதைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடுங்கையூர் காவல் நிலையம் மற்றும் மாமூல் கேட்ட ரவுடி கைது தொடர்பான புகைப்படம்
கொடுங்கையூர் காவல் நிலையம் மற்றும் மாமூல் கேட்ட ரவுடி கைது தொடர்பான புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 5:36 PM IST

சென்னை:கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரின் எழில் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் பாரிமுனையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மீது ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் ஏற்கனவே இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், தன்னுடன் கூலி வேலை செய்யும் இராயபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரை, நேற்று இரவு வீட்டிற்கு மது குடிக்க அழைத்துள்ளார். இரவு முழுவதும் இருவரும் மது அருந்தி வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்கியுள்ளனர். இன்று காலை 5 மணியளவில் எழுந்த சரவணன், ரஞ்சித் குமாரின் தங்கையை தவறாகப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ரஞ்சித் குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரவணனை சரமாரியாக வெட்டி, அவரது தலையை சிதைத்து கொலை செய்துள்ளார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார், ரஞ்சித் குமாரை கைது செய்துள்ளனர்.

அதேபோல், கிரேஸ் கார்டன் 1வது தெருவில் துணிக்கடை ஒன்றில் போதையில் நுழைந்த ரவுடி ஒருவர், கத்தியை கட்டி வியாபாரியிடம் மாமூல் கேட்டுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட கடையிலிருந்த மற்றவர்கள் அனைவரும், அந்த ரவுடியை மடக்கி பிடித்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், இராயபுரம் காவல்துறையினர் ரவுடியை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். முன்னதாக, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்ளுக்கு முன்பு சுமார் நான்கு கடைகளில் ரவுடிகள் கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு வியாபாரிகளை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராமாபுரத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த ஐந்து பேர் கைது! - Drug Smuggling In Ramapuram

ABOUT THE AUTHOR

...view details