திருநெல்வேலி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் மாலை அணிந்து, வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அந்த வகையில் நவராத்திரி முதல் நாள் கோயிலில் நடைபெறும் கொடியேற்றத்தை தொடர்ந்து, காப்பு கட்டி மாலை அணிந்த பக்தர்கள் விரதம் தொடங்குவார்கள்.
காளி உள்ளிட்ட தெய்வ வடிவங்களை வேடமணியும் பக்தர்கள், ஊரின் ஒதுக்குப்புறத்தில் கொட்டகை அமைத்து அங்கு காளி உள்ளிட்ட தெய்வங்களின் படங்களை காளிப்பிறையாக மாற்றி அங்கேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள். இந்நிலையில் பாளையங்கோட்டை, அண்ணா நகர் பகுதியில், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா விரதம் இருந்த பக்தர்கள், அப்பகுதியில் ஓலையிலான காளிப்பிறை கொட்டகை அமைத்து வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர்.
இன்றைய தினம் தசரா விழா நடைபெறும் சூழலில் நேற்று இரவு விழாக்களை முடித்துவிட்டு, அதிகாலையில் விரதம் இருந்த பக்தர்கள் வாகனம் மூலம் குலசேகரப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றனர். அந்த நேரத்தில் கொட்டகையில் இருந்த மின்விளக்குகளில் திடீர் கசிவு ஏற்பட்டு கொட்டகை முழுவதும் தீ பற்ற தொடங்கியது.