ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கடும் பின்னடைவைச் சந்தித்தது. 14 போட்டிகளில் விளையாடிய அந்த அணி, 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் முடித்துள்ளது.
இதற்கு கேப்டன்சி தான் காரணம் என ஹர்திக் பாண்டியா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரும், அவரது மனைவியும் விவாகரத்து பெறப் போவதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருமண வாழ்க்கை:இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பியா நாட்டைச் சேர்ந்த நடாஷா ஸ்டான்கோவிக், கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டனர். குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இவருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தொடக்கத்தில் இவர்களது வாழ்க்கை சுமூகமாகச் சென்ற நிலையில், சமீப காலமாக இருவருக்கும் பிரச்னை நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், தற்போது இருவரும் பிரியவுள்ளதாகவும், ஹர்திக் பாண்டியா நடாஷாவுக்கு ஜீவனாம்சமாக 7 0சதவீதம் கொடுக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமூக வலைத்தள பெயர் நீக்கம்:அண்மையில் நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயரில் இருந்து பாண்டியாவின் பெயரை நீக்கியுள்ளார். அதேபோல், அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். நடாஷாவின் பிறந்தநாளான மார்ச் 4ஆம் தேதியன்றும் ஹர்திக் பாண்டியா, நடாஷாவிற்கு வாழ்த்து தெரிவித்து எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை.
அதேபோல், நடப்பு ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டியின் போதும் அவர் மைதானத்திற்கு வரவில்லை. இருப்பினும், இன்று வரை நடாஷா ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் மனைவி பன்குரி ஷர்மா ஆகியோரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பா?இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதும், ஹர்திக் பாண்டியாவின் சொத்தில் இருந்து 70 சதவீதம் ஜீவனாம்சமும் கொடுப்பதாக கூறுவது அனைத்தும் தகவலே தவிர, இன்னும் நடாஷாவிடமிருந்தோ அல்லது ஹர்திக் பாண்டியாவிடம் இருந்தோ எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க:Fact Check; ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் மேட்ச் ஃபிக்சிங்கா? பேனரை வைத்து பரவிய தவறான தகவல்! - Match Fixing Fact Check