மேஷம்: இன்று உங்களை கவலைகள் சூழ வாய்ப்புள்ளது. உங்களிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்தல் உங்களுக்கு நன்மை பயக்கும்.
ரிஷபம்:அனைத்து விஷயங்களிலும் மரபுகளை கடந்து புதுமையாக செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். பிற்பகலில் உயரதிகாரிகளிடம் பணிந்து செல்ல நேரிடலாம், ஆகையால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை பயக்கும். மாலை நேரத்தில் உங்கள் பலவீனங்கள் அனைத்தும் உங்கள் பலமாக மாறக்கூடும்.
மிதுனம்: இன்று எந்த செயலிலும் முடிவு எடுப்பதற்கு முன்பு ஆழ்ந்து சிந்தித்து அதில் உள்ள நன்மைகள், தீமைகளை மனதில் கொண்டு கவனித்து, எச்சரிக்கையுடன் அனைத்து செயல்களையும் கையாளுதல் அவசியமாகும். சாதாரண விஷயங்களுக்கும் கவலை கொள்வீர்கள். நாளின் பிற்பகுதியில் உள்ள நலன்களைப் பற்றி அதிகமாக கவலைப்பட வாய்ப்புள்ளது. மற்றவர்களை பற்றி கவலைப்படுவதை தவிர்க்கவும். உங்களின் நலன் மீது அக்கறை கொள்ளவும்.
கடகம்: இன்று மங்களகரமான நாளாக அமைய வாய்ப்புள்ளது. பணிகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். மாலைப்பொழுதை மனதிற்கு நெருக்கமானவர்களுடன் செலவிடுவதன் மூலம் உங்கள் மனதில் பாரம் குறைய வாய்ப்புள்ளது.
சிம்மம்: இன்று கவனமாகவும், பாதுகாப்பான சூழலிலும் இருக்க விரும்புவீர்கள். உங்களின் ஆசைகள் நிறைவேற ஏற்ற நாளாக அமையும். உங்கள் வேலையில் உறுதியாகவும், குறிக்கோளுடனும் இருப்பீர்கள். எனினும், உங்கள் குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்க எண்ணுவீர்கள். இன்றைய தினத்தில் சிறு பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
கன்னி:இன்று உங்களின் கவனம் அதிகரிக்கலாம். வேலைகளை மகிழ்ச்சியாகவும், திறமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க முயற்சி செய்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல நல்வழியாக அமையப் பெறலாம்.