தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

உடலில் யூரிக் அமிலம் உற்பத்தியை குறைக்கணுமா? இந்த 5 சூப்பர் ஃபுட்ஸ் கட்டாயம் உதவும்! - FOODS TO REDUCE URIC ACID

கீழ்வாதம் முதல் சிறுநீரக கற்கள் வரை சிக்கல்களை ஏற்படுத்தும் யூரிக் அமிலம் உற்பத்தியை கட்டுப்படுத்த எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty)

By ETV Bharat Health Team

Published : Dec 9, 2024, 11:55 AM IST

யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகையான கழிவுப் பொருளாகும். இரத்தத்தில் உள்ள பியூரின்கள் சிதைவால் உற்பத்தி செய்யப்படும் இந்த இரசாயனம், பொதுவாக சிறுநீர் வழியாக வெளியேறும். ஆனால், எப்போது, சிறுநீரின் மூலம் இந்த இராசயனம் வெளியேறாமல் இருக்கிறதோ அப்போது இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

உடலில் அதிகப்படியான யூரிக் அமிலம் இருப்பது, மூட்டுகளில் படிக வடிவில் குவிந்து, மூட்டுவலி, கீழ்வாதம், சிறுநீரக கற்கள் என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்நிலையில், யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் 5 சூப்பர் ஃபுட்ஸ்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

கோப்புப்படம் (Credit - Getty)

சிட்ரஸ் பழங்கள்: எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் வைட்டமின் சி மற்றும் யூரிக் அமிலத்தின் வளமான மூலமாக இருக்கிறது. இந்த பழங்களை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, சிறுநீர் மூலம் யூரிக் அமிலத்தைக் வெளியேற்றி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. நேஷனல் சென்டர் போர் பயோடெக்னாலஜி இன்பர்மேசன் (NCBI) நடத்திய ஆய்வில், இரண்டு மாதங்களுக்கு வைட்டமின் சி கொண்ட பழம் அல்லது சப்ளிமெண்ட் எடுத்துக்கொள்வதால் யூரிக் அமிலம் குறைகிறது என தெரியவந்துள்ளது.

கொத்தமல்லி:ஆஜ்ஸிஜனேற்ற பண்புகளால் நிறைந்துள்ள கொத்தமல்லி கீழ்வாதத்துடன் தொடர்புடையதாகும். பாக்டீரியா, வைரஸ், அழற்சி எதிர்ப்பு பண்புகளால் கொத்தமல்லி நிறைந்துள்ளது. இதில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கீழ்வாதத்துடன் தொடர்புடைய வீக்கத்தை குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

கோப்புப்படம் (Credit - ETVBharat)

செர்ரிஸ்:யூரிக் அமிலத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது செர்ரி பழங்கள். செர்ரிகளில் உள்ள அந்தோசயினின்கள் (Anthocyanins) எனப்படும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு கூறு யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தி கீல்வாதத்தை குறைக்க உதவியாக இருக்கிறது.

க்ரீன் டீ: தினசரி க்ரீன் டீ குடிப்பது, உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உடலில் யூரிக் அமில உற்பத்தியை குறைக்கவும் உதவியாக இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்களுக்கும், கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் க்ரீன் டீ சிறந்த பானமாக இருக்கிறது. க்ரீன் டீ சாறு உடலில் உள்ள யூரிக் அமிலத்தை அகற்றும் என நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோப்புப்படம் (Credit - Getty)

இஞ்சி:யூரிக் அமில நோயாளிகளுக்கு இஞ்சி சாறு நன்மை பயக்கும். இஞ்சியில் உள்ள ஆன்டி செப்டிக், அழற்சி எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உடலில் யூரிக் அமில அளவை குறைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சரியான அளவு இஞ்சி சாறு அல்லது டீ தினசரி குடிப்பதால், மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

கோப்புப்படம் (Credit - ETVBharat)

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

  • குளிர் பானங்கள்
  • மது
  • சிவப்பு இறைச்சி
  • கடல் உணவு
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள்
  • பட்டாணி
  • கீரை
  • வேர்க்கடலை
  • திராட்சை

இதையும் படிங்க:யூரிக் ஆசிட் அளவை குறைக்கும் 6 இலைகள்..இப்போதே தெரிஞ்சுக்கோங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ABOUT THE AUTHOR

...view details