டெல்லி:நடப்பாண்டிற்கான (2025-26) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை (பிப்.1) 11 மணிக்கு, தனது எட்டாவது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில், பட்ஜெட்ட்டின் எதிரொலியாக தங்கத்தின் விலை குறையவுள்ளதாகவும், அதேவேளையில் வெள்ளியின் விலை அதிகரித்து வெள்ளி சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2025-26 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையை பரிசீலனை செய்து பார்த்ததில், மக்கள் தங்க நகை வாங்கும் திட்டத்தை செயல்படுத்த இதுவே சிறந்த ஆண்டாக இருக்கலாம். ஏனென்றால், பட்ஜெட்டைத் தொடர்ந்து தங்க நகை விலை குறையும் எனவும், வெள்ளி விலை குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2025ஆம் ஆண்டில் பொருட்களின் விலை 5.1 சதவீதமும், 2026ஆம் ஆண்டில் 1.7 சதவீதமும் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் உலோகங்கள் மற்றும் விவசாய மூலப்பொருட்களுக்கான நிலையான எதிர்பார்ப்பு ஆகியவற்றால், சந்தையில் எண்ணெய் விலைகளில் சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து உலோகங்களைக் கையாளும் பிரிவு நிபுணர்கள் கூறுகையில், "தங்கத்தின் விலைகள் குறையும், அதே நேரத்தில் வெள்ளி விலைகள் அதிகரிக்கக்கூடும் எனவும், இரும்புத் தாது மற்றும் துத்தநாக விலைகளில் குறைவு காரணமாக, உலோகங்கள் மற்றும் தாதுக்களின் விலைகள் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, உள்நாட்டு பணவிக்கம் காரணமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும்".