மதுரை:தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் பூக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மதுரையில் கனமழை பெய்த காரணமாக மலர் உற்பத்தி குறைந்ததால், மலர்ச் சந்தைக்கு பூக்கள் வரத்தும் குறைந்துள்ளது. அதனால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை மல்லிகை கிலோ ரூ.1,200க்கு விற்பனையாகிறது.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மலர் வணிக வளாகத்திற்கு நாள்தோறும் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு, சத்திரப்பட்டி, கொட்டாம்பட்டி, மேலூர், வலையங்குளம், ஆவியூர், திருமங்கலம், உசிலம்பட்டி என மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல வகையான பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, இப்பகுதிகளில் விளையும் மதுரை மல்லிகைக்கு தனிச் சிறப்பு உள்ளது.
இதையும் படிங்க:தீபாவளி நாளில் சட்டென குறைந்த பூக்கள் விலை.. கும்பகோணம் மலர் சந்தை வியாபாரிகள் கூறும் காரணம்!
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் மதுரை மல்லிகை:இதனால் இந்த மல்லிகை பூக்கள் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மட்டுமன்றி அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளுக்கும் மதுரையிலிருந்து டன் கணக்கில் மல்லிகை ஏற்றுமதி செய்யப்படுகிறது.