தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: முழு நிலவரம் - HARYANA JAMMU AND KASHMIR ELECTION

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 8:23 AM IST

Updated : Oct 8, 2024, 4:47 PM IST

ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் பணி இன்று (அக்.08) காலை 8 மணி தொடங்கியது. இரண்டு மாநிலங்களிலும் எந்தவித பிரச்னையும் இன்றி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஹரியானா:ஹரியானாவில் 90 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அம்மாநிலத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் அமைதியாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 65.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வாக்கு எண்ணிக்கை முடிவில், அம்மாநிலத்தில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) 2 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர்: மறுசீரமைப்புக்குப் பின்னர், 90 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது. இத்தேர்தலில் மொத்தம் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இங்கு வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி (ஜேகேஎன்சி) 42 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதேபோல், ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி (ஜேகேபிடிபி) 3 தொகுதிகளிலும், ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி (ஜேகேபிசிபி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

பொய்யானது கருத்துக் கணிப்புகள்:ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்; எனினும் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், இதற்கு மாறாக ஹரியானாவில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.

LIVE FEED

4:46 PM, 8 Oct 2024 (IST)

4.45 மணி நிலவரம்: ஹரியானாவில் 48 தொகுதிகளில் பாஜக வெற்றி

ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 89 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன. பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐஎன்எல்டி 2 தொகுதியிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

4:27 PM, 8 Oct 2024 (IST)

4.15 மணி நிலவரம்: ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளில் வெற்றி

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 90 தொகுதிகளின் முடிவுகளும் வெளியாகி விட்டன. தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 29 தொகுதிகளிலும், பிடிபி கட்சி 3 தொகுதியிலும், ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் இதர கட்சிகள் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

4:21 PM, 8 Oct 2024 (IST)

4.15 மணி நிலவரம்: ஹரியானாவில் 47 தொகுதிகளில் பாஜக வெற்றி

ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. பாஜக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஐஎன்எல்டி 2 தொகுதியிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

4:12 PM, 8 Oct 2024 (IST)

4:15 நிலவரம்: ஒமர் அப்துல்லா வெற்றி!

ஜம்மு -காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா கந்தர்பால் தொகுதியில் வெற்றி.

4:05 PM, 8 Oct 2024 (IST)

4 மணி நிலவரம்: ஹரியானா முன்னாள் முதல்வர் வெற்றி!

ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்திர சிங் ஹூடா, கர்ஹி சாம்ப்லா-கிலோய் சட்டமன்ற தொகுதியில் வெற்றி. பாஜக வேட்பாளரை அவர் தோற்கடித்தார்.

3:23 PM, 8 Oct 2024 (IST)

3 மணி நிலவரம்: ஹரியானாவில் 7 தொகுதிகளில் பாஜக வெற்றி, 43 தொகுதிகளில் முன்னிலை

ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி பாஜக 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 43 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் கூட்டணி 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 21 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும், ஐஎன்எல்டி 2 தொகுதியிலும், இதர கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

2:06 PM, 8 Oct 2024 (IST)

2 மணி நிலவரம்: ஹரியானாவில் 3 தொகுதிகளில் பாஜக வெற்றி, 45 தொகுதிகளில் முன்னிலை

ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 45 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 34 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதயிலும், ஐஎன்எல்டி 1 தொகுதியிலும், இதர கட்சிகள் 3தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

2:01 PM, 8 Oct 2024 (IST)

2 மணி நிலவரம் : ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி, 40 தொகுதிகளில் முன்னிலை

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி தேசிய மாநாட்டு கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 35 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பாஜக 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 20 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பிடிபி கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

1:02 PM, 8 Oct 2024 (IST)

1மணி நிலவரம்: ஹரியானாவில் 49 தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை

ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 35 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும், ஐஎன்எல்டி 1 தொகுதியிலும், இதர கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

1:00 PM, 8 Oct 2024 (IST)

1 மணி நிலவரம் : ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றி, 50 தொகுதிகளில் முன்னிலை

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி தேசிய மாநாட்டு கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 41 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, 26 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பிடிபி கட்சி 2 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

12:52 PM, 8 Oct 2024 (IST)

ஹரியானாவில் குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகட் தொடர்ந்து முன்னிலை

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்ட குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகட் 11ஆவது சுற்றின் முடிவில் 50,617 வாக்குகள் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஸ் குமார் 44567 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.

12:36 PM, 8 Oct 2024 (IST)

12.30 மணி நிலவரம்: ஹரியானாவில் 49 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது

ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 35 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும், ஐஎன்எல்டி 1 தொகுதியிலும், இதர கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

12:32 PM, 8 Oct 2024 (IST)

12.30 மணி நிலவரம்: குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகட் மீண்டும் முன்னிலை

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்ட குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகட் 9ஆவது சுற்று முடிவுகளின்படி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.

12:30 PM, 8 Oct 2024 (IST)

12.30 மணி நிலவரம் : ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி தேசிய மாநாட்டு கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக 28 தொகுதிகளிலும் பிடிபி கட்சி 2 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

12:04 PM, 8 Oct 2024 (IST)

12 மணி நிலவரம் : ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக 29 தொகுதிகளிலும் பிடிபி கட்சி 2 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

11:51 AM, 8 Oct 2024 (IST)

11.45 மணி நிலவரம்: ஹரியானாவில் 49 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது

ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 35 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும், ஐஎன்எல்டி 1 தொகுதியிலும், இதர கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

11:47 AM, 8 Oct 2024 (IST)

11.45மணி நிலவரம் : ஜம்மு-காஷ்மீரில் தேசியமாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைகிறது

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக 26 தொகுதிகளிலும் பிடிபி கட்சி 3 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

11:34 AM, 8 Oct 2024 (IST)

11.30 மணி நிலவரம் : ஜம்மு-காஷ்மீரில் தேசியமாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி தேசியமாநாட்டு கட்சி 41 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக 26 தொகுதிகளிலும் பிடிபி கட்சி 4 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

11:30 AM, 8 Oct 2024 (IST)

11.30 மணி நிலவரம்: ஹரியானாவில் 50 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது

ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி பாஜக 50 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 34 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும், ஐஎன்எல்டி 1 தொகுதியிலும், இதர கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

11:19 AM, 8 Oct 2024 (IST)

11.15 மணி நிலவரம்: ஜம்மு-காஷ்மீரில் உமர் அப்துல்லா இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை

தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான உமர் அப்துல்லா தாம் போட்டியிட்ட புட்கம், கந்தர்பால் ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளார் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

11:01 AM, 8 Oct 2024 (IST)

11மணி நிலவரம் : ஜம்மு-காஷ்மீரில் தேசியமாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேசியமாநாட்டு கட்சி 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக 29 தொகுதிகளிலும் பிடிபி கட்சி 4தொகுதிகளிலும் இதர கட்சிகள் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

10:57 AM, 8 Oct 2024 (IST)

தற்போதைய நிலவரம் : ஹரியானாவில் ஆட்சிமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களில் பாஜக முன்னிலை

மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையத்தை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி பாஜக 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 36 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஐஎன்எல்டி 1 தொகுதியிலும், இதர கட்சிகள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

10:48 AM, 8 Oct 2024 (IST)

10.45 மணி நிலவரம் : ஜம்மு-காஷ்மீரில் தேசியமாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களில் முன்னிலை

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேசியமாநாட்டு கட்சி 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக 28 தொகுதிகளிலும் பிடிபி கட்சி 4தொகுதிகளிலும் இதர கட்சிகள் 11 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

10:45 AM, 8 Oct 2024 (IST)

10.45 மணி நிலவரம் : ஹரியானாவில் பாஜக முன்னிலை

மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. பாஜக 41 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஐஎன்எல்டி 4 தொகுதியிலும், இதர கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

10:34 AM, 8 Oct 2024 (IST)

ஹரியானாவில் காங்கிரஸ் வேட்பாளர் குத்துசண்டை வீராங்கனை வினேஷ் போகட் பின்னடைவு

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்ட குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகட் முன்னிலை வகித்த நிலையில் தற்போதைய நிலவரப்படி பின்னடைவில் உள்ளார். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் வினேஷ் போகட் 12290 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் யோகேஸ்குமார், போகட்டை விடவும் 2039 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

10:31 AM, 8 Oct 2024 (IST)

10.30 மணி நிலவரம் : ஹரியானாவில் பாஜக முன்னிலை

மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. பாஜக 41 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. என்எல்டி 4 தொகுதியிலும், இதர கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

10:26 AM, 8 Oct 2024 (IST)

10.30 மணி நிலவரம் : ஜம்மு-காஷ்மீரில் தேசியமாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேசியமாநாட்டு கட்சி 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக 28 தொகுதிகளிலும் பிடிபி கட்சி 3தொகுதிகளிலும் இதர கட்சிகள் 12 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

10:18 AM, 8 Oct 2024 (IST)

10.15 மணி நிலவரம் : ஹரியானாவில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை

மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. பாஜக 46 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 34தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஐஎன்எல்டி 4 தொகுதியிலும், இதர கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

10:06 AM, 8 Oct 2024 (IST)

ஹரியானாவில் பாஜக வேட்பாளர் ஸ்ருதி சவுத்ரி முன்னிலை பெற்றுள்ளார்

ஹரியானாவின் தூஸ்ஹாம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்ருதி சவுத்ரி முன்னிலை வகிக்கிறார்

10:03 AM, 8 Oct 2024 (IST)

ஹரியானாவில் காங்கிரஸ் வேட்பாளர் குத்துசண்டை வீராங்கனை வினேஷ் போகட் முன்னிலை

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்ட குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகட் முன்னிலை வகிக்கிறார்.

9:59 AM, 8 Oct 2024 (IST)

10 மணி நிலவரம் : ஜம்மு-காஷ்மீரில் தேசியமாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேசியமாநாட்டு கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக 23 தொகுதிகளிலும் பிடிபி கட்சி 3தொகுதிகளிலும் இதர கட்சிகள் 13 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

9:54 AM, 8 Oct 2024 (IST)

10 மணி நிலவரம் : ஹரியானாவில் பாஜக முன்னிலை

மொத்தமுள்ள 90 தொகுதிகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கூட்டணி 38 தொகுதிகளிலும் பாஜக 45தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஐஎன்எல்டி 3 தொகுதியிலும், இதர கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

9:40 AM, 8 Oct 2024 (IST)

முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா முன்னிலை

முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் வேட்பாளருமான பூபேந்தர் சிங் ஹூடா தாம் போட்டியிட்ட கார்ஹி சாம்ப்ளா கிலோய் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

9:38 AM, 8 Oct 2024 (IST)

ஹரியானா முதலமைச்சர் முன்னிலை

ஹரியான முதலமைச்சர் நயாப் சிங் சைனி தாம் போட்டியிட்ட லாத்வா தொகுதியில் முன்னிலையில் உள்ளார்

9:31 AM, 8 Oct 2024 (IST)

9,30 மணி நிலவரம் : ஜம்மு-காஷ்மீரில் தேசியமாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 80 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேசியமாநாட்டு கட்சி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக 22 தொகுதிகளிலும் பிடிபி கட்சி 3 தொகுதிகளிலும் இதர கட்சிகள் 11 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

9:26 AM, 8 Oct 2024 (IST)

9,30 மணி நிலவரம் : ஹரியானாவில் காங்கிரஸ் முன்னிலை

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 74 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கூட்டணி 35 தொகுதிகளிலும் பாஜக 32 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஐஎன்எல்டி 2 தொகுதியிலும், இதர கட்சிகள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

9:06 AM, 8 Oct 2024 (IST)

9 மணி நிலவரம்: ஜம்மு-காஷ்மீரில் தேசியமாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 52 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. தேசியமாநாட்டு கட்சி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக 16 தொகுதிகளிலும் பிடிபி கட்சி 4 தொகுதிகளிலும் இதர கட்சிகள் நான்கு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

8:59 AM, 8 Oct 2024 (IST)

ஹரியானாவில் காங்கிரஸ் முன்னிலை

ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 56 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன. அதில் இதுவரை காங்கிரஸ் கூட்டணி 29 தொகுதிகளிலும் பாஜக 23 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. ஐஎன்எல்டி கூட்டணி ஒரு தொகுதியிலும், இதர கட்சிகள் மூன்று தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

Last Updated : Oct 8, 2024, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details