ETV Bharat / state

ரங்கோலிக் கோலங்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

விருதுநகர்: அனைவரும் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மலர்களால் ஆன ரங்கோலிக் கோலங்கள் மூலம் அலுவலகப் பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

author img

By

Published : Mar 10, 2021, 8:21 AM IST

ELECTION awareness with rangoli kolanga
ரங்கோலி கோலங்களால் தேர்தல் விழிப்புணர்வு

எதிர் வரும் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் அனைவரும் பங்கேற்று வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (மார்ச்.09) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள், "என் வாக்கு என் உரிமை", "என் ஓட்டு விற்பனைக்கு அல்ல" போன்ற வாசகங்கள் அடங்கிய ரங்கோலிக் கோலங்களை மலர்களால் அழகுப்படுத்தி இருந்தனர். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் ஆர்வமுடன் இக்கோலங்களை கண்டு ரசித்தனர். வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

இதையும் படிங்க:தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.