ETV Bharat / state

குடிநீர் வேண்டி சமூக இடைவெளி கடைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியல் !

author img

By

Published : May 8, 2020, 6:05 PM IST

வேலூர் : குடிநீர் வழங்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து காலி குடங்களுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வேண்டி சமூக இடைவெளி கடைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

வேலூர் கே.வி.குப்பம் தாலுக்காவை அடுத்துள்ள சின்ன ஆலங்கநேரி, புட்டாம்பட்டி ஆகிய இரு பகுதிகளுக்கு அடிப்படை நீர் ஆதாரமாக 5 ஆழ்துளை கிணறுகள் இருந்துவந்தன. இந்நிலையில், அவற்றில் பழுது ஏற்பட்டு, நீரும் வற்றிப் போனதால் குடிநீருக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலூர் மாவட்ட நிர்வாகம் வழங்கி வந்த நீரை, குடிநீராக பயன்படுத்தி வந்த இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த சில நாள்களாக அதுவும் தடைப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல முறை அரசு அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இப்பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் மேல்மாயில் செல்லும் சாலையில சாலை மறியலில் ஈடுபட்டனர். கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை விதிமுறையான தகுந்த தனிநபர் இடைவெளியை கடைபிடித்து மறியலில் ஈடுபட்டது சிறப்பு.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் லோகநாதன், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆழ்துளைக் கிணற்றின் பழுது விரைவில் சரிசெய்யப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. பெண்களின் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.