ETV Bharat / state

தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மெகா ரங்கோலி போட்டி...!

வேலூர்: வருகின்ற மக்களவைத் தேர்தலில் 100 % வாக்குப்பதிவினை வலியுறுத்தி 200 பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட ரங்கோலிப் போட்டி நடைபெற்றது.

author img

By

Published : Apr 9, 2019, 1:00 PM IST

மெகா ரங்கோலி

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. சிலம்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று வேலூர் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் 200 பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது. அவர்கள் இந்தியாவின் வரைபடத்தை வரைந்து அதனுள் பல வண்ணங்களை நிரப்பினர். இந்திய வரைபட வடிவில் வரையப்பட்ட இந்த கோலம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோல் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விரலில் மை வைக்கப்பட்ட கோலங்களும் வரையப்பட்டன.

வேலூரில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி

200 பெண்கள் பங்கேற்ற மெகா கோலப்போட்டி

பாராளுமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன குறிப்பாக சிலம்பாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் மூலமும் விழிப்புணர்வு பேரணிகள் மூலமும் பொதுமக்களிடையே அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் அதேபோல் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் மாரத்தான் போட்டி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்துதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன அந்த வகையில் இன்று வேலூர் மாவட்டத்தில் 200 பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட கோலப்போட்டி நடைபெற்றது வேலூர் புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்ற இந்த கோலப்போட்டியில் வேலூர் மாவட்ட மகளிர் திட்ட பணிகளை சேர்ந்த 200 பெண்கள் பங்கு பெற்றனர் அவர்கள் இந்தியாவின் வரைபடத்தை வரைந்து அதனுள் கோலங்கள் வண்ண வண்ண கலர்களில் போட்டு அசத்தினர் இந்திய வரைபட வடிவில் வரையப்பட்ட இந்த கோலம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படுத்தியது அந்த வழியாக சென்ற அனைவரும் இந்த கோலத்தை பார்த்து ஆச்சரியப் பட்டனர் இதேபோல் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு விரல் புரட்சியை குறிப்பது போல் விரல் மை இருப்பது போன்ற கோலங்களும் வரையப்பட்டன இதற்கிடையில் இந்த போட்டியை வேலூர் மாவட்ட ஆட்சியரும் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமன் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் இரவு 9 மணி ஆகியும் மாவட்ட ஆட்சியர் ராமன் வராததால் போட்டியில் பங்கேற்ற பெண்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர் பின்னர் அங்கிருந்த அதிகாரிகளை வைத்து போட்டி துவக்கப்பட்டது சுமார் 200 பெண்கள் இந்த கோலப் போட்டியில் பங்கேற்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.