ETV Bharat / state

ஆம்பூர் கங்கை திருக்கோயிலில் மார்கழி திருத்தேர் விழா!

author img

By

Published : Dec 19, 2019, 1:15 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் கங்கை  திருக்கோயிலில் மார்கழி திருத்தேர் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

மார்கழி திருத்தேர் விழா
மார்கழி திருத்தேர் விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள கங்கை அம்மன் திருக்கோயிலில் மார்கழி திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனையும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து, இன்று காலை அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக அலங்கார ஆராதனை; திருத்தேர் அலங்காரம், கலச ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் 'கோவிந்தா' என்ற கோஷத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது மாட வீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது. பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடன், சிதறு தேங்காய் உடைத்தல், திருத்தேர் மீது மிளகு உப்பு எறிந்து தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

ஆம்பூர் கங்கை திருக்கோயிலில் மார்கழி திருத்தேர் விழா

திருவிழாவில், சிலம்பாட்டம், பம்பை, நையாண்டி, பொய்க்கால், மயிலாட்டம், தப்பட்டை மற்றும் வானவேடிக்கை முழங்க திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆம்பூர் நகர காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

Intro:ஆம்பூரில் நடைபெற்ற அருள்மிகு கெங்கை ஆலயதில் மார்கழி திருத்தேர் விழாவில் ஏராளமான பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்தும் வடம்பிடித்து பிரத்தனையை நிறைவேற்றினர்.
Body:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கங்கை அம்மன் திருக்கோவில் எல்லை அம்மன் திருக்கோவில் மார்கழி திருத்தேர் திருவிழா
வெகு விமர்சையாக நடைபெற்றது நேற்றைய தினம் காலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனையும் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை திருத்தேர் அலங்காரம் கலச ஊர்வலம் நடைபெற்றது இதை அடுத்து சிலம்பாட்டம் பம்பை நையாண்டி பொய்க்கால் பிறவி மயிலாட்டம் தப்பட்டை மற்றும் வாணவேடிக்கை முழங்க திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை சிதறு தேங்காய் உடைத்தல் மற்றும் திருத்தேர் மீது மிளகு உப்பு ஆகியவற்றை எரிந்து தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தேரானது மாட வீதி வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஆம்பூர் நகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.