ETV Bharat / state

மோடியும், அமித்ஷா ஹிட்லர், முசோலினி...

author img

By

Published : Aug 12, 2019, 6:52 PM IST

திருவாரூர்: மோடியும் அமித்ஷாவும், அர்ஜுனர் கிருஷ்ணர் இல்லை அவர்கள் இருவரும் ஹிட்லர் , முசோலினி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்; 'மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எப்போதும் ஒரு செய்தியை எடுத்து விவாதிப்பது வழக்கம், அந்த வகையில் ஆர்டிக்கிள் 370 குறித்து விவாதம் நடத்தியதற்கு 30 மாணவர்கள் மீது பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பது சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும், மத்திய அரசு குறித்து விவாதம் செய்யக்கூடாது என்பதற்காகவே பல்கலைக்கழக நிர்வாகம் மோடி அரசின் தலையாட்டி பொம்மைபோல் செயல்படுகிறது.

மோடியும், அமித்ஷாவும் இருவரும் ஹிட்லர், முசோலினி...

ரஜினிகாந்த் பேசிவருவது சந்தர்ப்பவாத பேச்சு. மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்ண இல்லை அவர்கள் இருவரும் ஹிட்லர் முசோலினி என விரைவில் ரஜினிகாந்த் புரிந்துகொள்வார். சிபிஎஸ்சி பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தீர்மானித்திருக்கும் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் அரசே அந்தத் தொகையை செலுத்த வேண்டும், இந்த தொகையை செலுத்துவதால் அரசு கஜானா ஒன்றும் காலியாகாது' என்றார்.

Intro:

Body:மோடியும் அமித்ஷாவும், அர்ஜுனர் கிருஷ்ணர் இல்லை அவர்கள் இருவரும் ஹிட்லர் , முசோலினி என விரைவில் ரஜினிகாந்த் புரிந்து கொள்வார் என திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி.

பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எப்போதும் ஒரு செய்தியை எடுத்து விவாதிப்பது வழக்கம், அந்த வகையில் ஆர்டிகல் 370 குறித்து விவாதம் நடத்தியதற்கு 30 மாணவர்கள் மீது பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இச்செய்கை கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் மத்திய அரசு குறித்து விவாதம் செய்ய கூடாது என்பதற்காகவே பல்கலைக்கழக நிர்வாகம் மோடி அரசின் தலையாட்டி பொம்மை போல் செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த நடவடிக்கையை வாபஸ் வாங்காவிட்டால் அனைத்து கல்லூரி மாணவர்களையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் ரஜினிகாந்த் பேசிவருவது சந்தர்ப்பவாத பேச்சு என்றும், மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்ண இல்லை அவர்கள் இருவரும் ஹிட்லர் முசோலினி என விரைவில் ரஜினிகாந்த் புரிந்து கொள்வார் என கூறினார்.

சிபிஎஸ்சி பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தீர்மானத்திற்கும் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் அரசே அந்த தொகையை செலுத்த வேண்டும், இந்த தொகையை செலுத்துவதால் அரசு கஜானா ஒன்றும் காலியாக கூடாது எனக் கூறினார்.

அதோடு தமிழக பிரச்சினையில் முதல்வர் ஏதோ குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுப்பது போல் மத்திய அரசிடம் மனு கொடுத்து வருகிறார், மொத்தத்தில் தமிழகத்தை காவு கொடுக்கும் நிலை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.