ETV Bharat / state

கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக முதலமைச்சர் உள்ளார் - முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா

author img

By

Published : Jul 21, 2023, 9:35 AM IST

விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தேனியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்காக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் எஸ்.டி.கே ஜக்கையனின் படம் இடம் பெறாதது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

திமுகவிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய கோகுல இந்திரா

தேனி: அத்தியவாசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, “செந்தில் பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் கீ கொடுத்தால் என்னவென்று தெரியாமல் ஆடுகின்ற பொம்மையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். மாமன்னன் படம் குறித்து பேசும் திமுகவினர் ஆட்சிக்கு வந்த பின் முதல் கையெழுத்தாக மதுவிலக்கை கொண்டு வருவோம், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற அவர்களின் வாக்குறுதிகளை குறித்து பேசுவதில்லை.

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்றவற்றை தமிழ்நாட்டு மக்களுக்கு தருகிற அரசாக திமுக அரசு இருக்கிறது. முதலமைச்சர் மற்றும் அவரது மகன் குறித்த ஊழல் பற்றி தெரிவித்த அமைச்சரின் ஆடியோ வெளியானதால் அவரின் அமைச்சர் பதவி மாற்றப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜிக்காக மருத்துவமனைக்குச் சென்று கண்ணீர் விடுகிறார் முதலமைச்சர்.

இரண்டு ஆண்டு கால ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன் மற்றும் கரப்சன் என்று செயல்பட்ட திமுக அரசு, மக்கள் பிரச்னைகளில் முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. மக்கள் நலனில் அக்கறை செலுத்துவம் இல்லை. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, புரட்சித் தலைவராக பார்க்க வேண்டும், புரட்சித்தலைவியாக பார்க்க வேண்டும், கட்சியின் தொண்டராகவும் பார்க்க வேண்டும்.

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அரிசி கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளைகள் சம்பவம் அதிகரிக்கிறது” என கூறினார். பின்னர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக தேனி பங்களாமேடு பகுதியில் ஏராளமான பேனர்கள் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்தது.

ஒரு பேனரில் கூட இடம் பெறாத எஸ்டிகே ஜக்கையனின் படம்

அதில் அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே ஜக்கையனின் படம் ஒரு பேனரில் கூட இடம் பெறாதது தற்போது பேசுபொருளாகி உள்ளது. எஸ்.டி.கே ஜக்கையன் அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினராகவும், டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் கம்பம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் இரு பிரிவுகளாக பிரிந்தபோது தேனி மாவட்டத்தில் இருந்து ஈபிஎஸ்க்கு தனது முதல் ஆதரவை தெரிவித்தார். தேனியில் அதிமுக சார்பில் நடைபெறும் அனைத்து போராட்டங்களும் எஸ்.டி.கே ஜக்கையனின் தலைமையில்தான் நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்ட ஒரு பேனரில் கூட அவரது புகைப்படம் இடம் பெறாமல் இருந்தது தற்போது பேசுபொருளாகி உள்ளது.

பின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு கோகுல இந்திரா வந்தபோது அவருடன் எஸ்.டி.கே ஜக்கையனும் வருகை தந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: EPS பழனிக்கு சென்று வந்தால் திமுக கதை முடிந்தது - முன்னாள் அமைச்சர் வளர்மதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.