மதுரை: அக்டோபர் 24ஆம் தேதி முதல் மயிலாடுதுறை முதல் திண்டுக்கல் - மயிலாடுதுறை விரைவு ரயில்கள் (16847/16848) மற்றும் மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் (06665/06662) ஆகிய இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ரயிலாக புதிய ரயில் எண்களுடன் இயக்கப்படும்.
அதன்படி மயிலாடுதுறைலிருந்து செங்கோட்டை விரைவு ரயில் (16847) மயிலாடுதுறையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை முதல் மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) செங்கோட்டையிலிருந்து காலை 07.00 மணிக்கு புறப்பட்டு மாலை 05.10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்.
இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர் மஞ்சத்திட,ல் திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பன் கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்புடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நிலவியலாளர் கைது